அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே நகர செயலாளர் V. கிருஷ்ணகுமார் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், நகர பொருளாளர் வடுகை கனகு, மாணவரணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா MC, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பி.ஆர்.கே குருசாமி, நகர மகளிர் அணிச் செயலாளர் சபினா பேகம், கவிதா மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.