
தொண்டாமுத்தூர் ஊராட்சியில் மற்றும் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் ரூ. 3.79 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். புதிய தார் சாலைகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்து, ஏற்கனவே நிறைவுற்ற மக்கள் நல திட்டங்களைப் பற்றியும் அவர் பேசினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, அவர், “அதிமுக ஆட்சியின்போது சொத்து வரி, மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து மீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதை மக்கள் மறக்கவில்லை. திமுக அரசு மக்களை பாதிக்கக்கூடிய வகையிலான வரி சுமையை சுமத்தவில்லை என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் உணர வேண்டும்” என்றார்.


