Monday, September 15

அரசியல்

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

அரசியல்
சென்னை: ஃபென்ஜால் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஃபென்ஜால் புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு உதவ பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்களை நேரில் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள்கடலூர்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலு.கிருஷ்ணகிரி: அமைச்சர் சு. முத்துசாமி.தருமபுரி: அமைச்சர் ஆர். ராஜேந்திரன்.முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தின் நிலவரத்தை களத்தில் செயல்பட்டு வரும் அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கேட்டறிந்து, மக்க...
பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு: விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மனித சங்கிலி..

பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு: விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மனித சங்கிலி..

அரசியல்
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் காந்திபுரம் பஸ் நிலையம் எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் I. காமிலா பானு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பைரோஸ், துணைத் தலைவர் சல்மா, பொருளாளர் மெகருன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை கண்டித்து குரல் கொடுத்ததுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கோஷங்களை ...
தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசியல்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்-சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் அவர்களின் மகன் ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய அவர், "திருப்பூர் பகுதியில் மூவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த தொடர்ச்சியான குற்றங்கள் தமிழ்நாட்டில் 'ஆட்சி இருக்கிறதா இல்லையா?' என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புகின்றன," எனக் குறிப்பிட்டுள்ளார்."தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்," என்று எடப்பாடி பழனிசாமி தனது கருத்தில் தெரிவித்தார்.இந்த கொலை சம்பவத்தில் தொடர...
பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு…

பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு…

அரசியல்
வயநாடு மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அவர் 6,22,000 வாக்குகளை பெற்று, 4,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிகழ்வுகள் தொடங்கியதும், பிரியங்கா காந்தி மற்றும் நாண்டெட் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர வசந்த் ராவ் சவான் ஆகியோர் எம்.பி. பதவியேற்றனர். அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார்.இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்திக்கு பிறகு நேரு குடும்பத்தில் இருந்து எம்.பி.யாக பதவியேறும் மூன்றாவது பெண் பிரியங்கா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றத்திற்கு கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்து வந்த பிரியங்கா காந்தியை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாசலில் இருந்து அழைத்துக்கொண்டு வ...
துணை முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்…

துணை முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்…

அரசியல்
பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய கழகச் செயலாளர் வே. மருதவேல் தலைமையில் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்பொள்ளாச்சி வடக்கு - கிழக்கு ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வே. மருதவேல் வழங்கினார்.மேலும் கேக் வெட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய செயலாளர் வே.மருதவேல் பேசும் போது ஆதிக்கவாதிகள் மட்டுமே கொண்டாடி வந்த பிறந்தநாள் வி...
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: தொண்டர்களுக்கு வேண்டுகோள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: தொண்டர்களுக்கு வேண்டுகோள்

அரசியல்
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை வருகிற நவம்பர் 27-ம் தேதி கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு கழக தொண்டர்களுக்கு அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, பிறந்தநாளை ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்காக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "திராவிட இயக்க முன்னோடிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தங்கள் பிறந்தநாள்களை இயக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் அசாதாரண அனுசரணை அளிக்கும் நிகழ்வாக மாற்றியமைத்தனர். அதேபோல, கழகத்தோழர்கள் எனது பிறந்தநாளையும் ஆக்கபூர்வமான மக்கள் சேவைகளுக்கும் கழக பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். என் பிறந்தநாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்...
ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கும் இந்தியா கூட்டணிக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கும் இந்தியா கூட்டணிக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

அரசியல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், *"ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள். அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளை பா.ஜ.க. கட்சி கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கியிருந்தாலும், அவற்றையெல்லாம் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று, ஹேமந்த் சோரன் அவர்கள் வெற்றியைப் பெற்றுள்ளார். அனைத்துத் தரப்பினரையும் இணைத்து கொண்டு செல்லும் அவரது தலைமையில், தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும...
பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் – தாம்பரம் யாக்கூப் மீது நடவடிக்கை கோரி மனு…

பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் – தாம்பரம் யாக்கூப் மீது நடவடிக்கை கோரி மனு…

அரசியல்
சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி நிகழ்ச்சியில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம், தமிழ்நாடு கொலைகார மாநிலமாக உருவெடுத்து வருவதாக விமர்சித்துள்ளார்....சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் பாஜக மூத்த அதலைவரும் தமிழக பாஜக ஒருன்ஹ்கிணைப்பாளருமான எச். ராஜாவுக்கு 2 மணி நேரம் பாதுகாப்பை விளக்கிக் கொண்டால் அவர் எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுக்க மாட்டார் என்றும் அவர் எங்கு பேட்டி கொடுத்தாரோ அது...
காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது புகார்

காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது புகார்

அரசியல்
தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் கோவை செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது-கோவை விமான நிலையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலை வரவேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கோவை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம் பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் போது காங்கிரஸ் நிர்வாகிகள் மயிரா ஜெயக்குமார், தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வேண்டுமென்றே என்னுடன் வந்தவர்களையும் என்னையும் தாக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையினர் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அப்போது மயூரா ஜெயக்குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றார். மயூரா ஜெயக்குமாரிடம் கை துப்பாக்கி உள்ளது விமான நிலைய வாசலில் வைத்து எனக்கும் என்...
உதவி துணை கண்காணிப்பாளருக்கு மிரட்டல் விசிக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கைது

உதவி துணை கண்காணிப்பாளருக்கு மிரட்டல் விசிக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கைது

அரசியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் அசோக் குமார் வழக்கறிஞரான இவர் நேற்று முன் தினம் மாலை வடக்கிபாளையம் பிரிவில் வைக்கப்பட்டு உள்ள பிளக்ஸ் பேனர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்  அதனை அகற்றுமாறு பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர்  சிருஷ்டி சிங்கிடம் தொலைபேசியில் பேசி உள்ளார் அப்போது உதவி  கண்காணிப்பாளரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொன்டனர் இந்நிலையில் நேற்று இரவு அசோக்குமாரை பொன்னாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து  கைது செய்தனர். மேலும் தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் கைது செய்யப்பட்டு எங்கே விசாரனை செய்து வருகின்றனர் என விசிக நிர்வாகிகள் போலிசாரிடம் கேட்டபோது சரியான பதில் கூறாததால்...