ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
*”ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்.
அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளை பா.ஜ.க. கட்சி கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கியிருந்தாலும், அவற்றையெல்லாம் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று, ஹேமந்த் சோரன் அவர்கள் வெற்றியைப் பெற்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரையும் இணைத்து கொண்டு செல்லும் அவரது தலைமையில், தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி!”*
இவ்வாறு முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.