பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய கழகச் செயலாளர் வே. மருதவேல் தலைமையில் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
பொள்ளாச்சி வடக்கு – கிழக்கு ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வே. மருதவேல் வழங்கினார்.மேலும் கேக் வெட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒன்றிய செயலாளர் வே.மருதவேல் பேசும் போது ஆதிக்கவாதிகள் மட்டுமே கொண்டாடி வந்த பிறந்தநாள் விழாக்களை பாமரரும் கொண்டாட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா எனவே பிறந்தநாள் விழாவை ஏழை எளியோருக்கு உதவிகள் புரிந்து அவர்களின் கவலையை களைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அனைவரும் சரிசமமாக ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாத நிலையை உருவாக்கியவர் கலைஞர், இரு மாபெரும் தலைவர்களின் எண்ணங்களை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றி வருவதாகவும், அதையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கருத்தில் கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அவர்களுடனும் பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாநில மாவட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்