
2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்- தஞ்சையில் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.
தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு,
யார் கட்சி ஆரம்பித்தாலும் பயமில்லை. இன்னொருத்தர் கட்சி ஆரம்பித்ததை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். யார் தேவை - தேவை இல்லை என்று தீர்மானிப்பார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதை பொருள் கலாச்சாரம் தான். மாணவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. வருங்கால சமுதாயத்தின் சீரழிக்கும் செயல்.முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக உருவாக்க முடியும் என்றார்.
சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்...