மத்திய அரசின் 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை தேர்வு செய்யும் அறிவிப்பு பல்வேறு தரப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நேரடி நியமனம் முறையை ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வந்த நிலையில், இப்போது 45 அதிகாரிகள் ஒரே கட்டமாக துணை மற்றும் இணைச் செயலாளர் பதவிகளில் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டனத்தையும் சந்தித்த, மத்திய அரசு லேட்ரல் என்ட்ரி முறையை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வரவேற்று வருகின்றனர், ஆனால் லேட்ரல் என்ட்ரி முறையை கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக இடையே கடுமையான விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.
Leave a Reply