நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவில் விஜய் தனது வீட்டிலிருந்து பனையூர் அலுவலகத்திற்கு வந்து, நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை வழங்கினார். கட்சியின் கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில், நடுவில் வாகை மலர் உள்ள வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply