அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…

images 67 - அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்...

தமிழ்நாட்டில் 3 முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 தலைவர்களில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர், ஆனால் தற்போது அச்சுறுத்தல் இல்லாத காரணத்தால் அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காவல்துறையின் தரப்பில், எதிர்காலத்தில் இவர்கள் உயிருக்கு எதுவிதமான அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாதுகாப்பு மீண்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts