தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கொடி இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், 2026 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.
முன்னதாக, வரவிருக்கும் ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்ற தகவல் வெளியானது. இதனிடையே, பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் தவெக கட்சியின் கொடியை பறக்கவிட்டுள்ளனர். இந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகம் காட்சியளிக்கிறது.
இது தவெகவின் அதிகாரப்பூர்வ கொடி என உறுதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Leave a Reply