Saturday, April 19

லைப்ஸ்டைல்

“கோவையில் வெண்கல சுழலும் உலக உருண்டை மற்றும் ஜல்லிக்கட்டு காளை சிலைகள்: பொதுமக்கள் வெகுவாக வரவேற்பு”

“கோவையில் வெண்கல சுழலும் உலக உருண்டை மற்றும் ஜல்லிக்கட்டு காளை சிலைகள்: பொதுமக்கள் வெகுவாக வரவேற்பு”

லைப்ஸ்டைல்
கோவையில் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டின் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சுழலும் உலக உருண்டை வெண்கல சிலைகளை கண்டு பொதுமக்கள் வியப்பு.. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில், ரம்மியமான சூழல் குளக்கரைகள் சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், ரேஸ்கோர்ஸ் நடைபாதை, என பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன.. இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகுபலி திரைப்படத்தில் பணியாற்றிய (Flag Ship) ஃப்லாக் ஷிப் மீடியா குழுவினரால் உருவாக்கப்பட்ட வேண்கல குதிரை சிலை,தமிழ் பாரம்பரிய காளை மாடுகள் சிலை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இதே குழுவினர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிரம்மாண்ட வெண்கல கையில் உலக உருண்டை சுற்றுவத...
“போலீஸ் அக்கா திட்டம்”  டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு

“போலீஸ் அக்கா திட்டம்” டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு

லைப்ஸ்டைல்
டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் மாணவர் புகார் குழு, போதைப் பொருள் தடுப்பு குழு, பகடிவதை குழு மற்றும் சைபர் குற்றத் தடுப்புக் குழு இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு இளம் தலைமுறையினருக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாநகரக் காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி என்.ஜி.பி. கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி வரவேற்புரை வழங்கினார். கோவை மாநகர காவல் ஆணையர் கே. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் மாநகர வடக்கு துணை காவல் ஆணையர் முனைவர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். இந்நிகழ்வின் தொடக்கமாக, டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசா...
ஸ்வீடனில் குழந்தைகள் செல் போன் பயன்படுத்த தடை…

ஸ்வீடனில் குழந்தைகள் செல் போன் பயன்படுத்த தடை…

லைப்ஸ்டைல்
இன்றைய நவீன உலகில், செல்போன் பலருக்கும் ஒரு ஆறாவது விரலாக மாறி விட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை தவிர்க்க முடியாத அளவிற்கு பயன்படுத்துகின்றனர். அத்துடன், செல்போனை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளில் மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, சுவீடன் சுகாதாரத்துறை, பெற்றோர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி:** -2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் அல்லது டி.வி. போன்ற திரைத்தன்மை உள்ள சாதனங்களை பார்ப்பதை பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். - 2 முதல் 5 வயதுடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் செல்போன் பயன்படுத்தலாம். - 6 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு 2 மணி நேரம் வரை செல்போன் பயன்படுத்த அனுமதிக்கலாம். - 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 மணி நேரம்...
கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா…

கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா…

லைப்ஸ்டைல்
கோவையில், M.K தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் மற்றும் ஏழிசை மன்னர் M.K தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள் விழா கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடல் அருகே விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா, தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் தலைமையில் நடத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் 21-ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்திற்காக பாடுபடும் தலைவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. அத்துடன், செய்தியாளர்களை சந்தித்து...
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு நிறுவனர் தின விழா..

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு நிறுவனர் தின விழா..

லைப்ஸ்டைல்
கோவை அருகே உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம், அதன் 25வது ஆண்டு நிறுவனர் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழா ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது, இதில் அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்க நிகழ்வாக பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா, குத்துவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் பணிகள் குறித்து விளக்கினார். குருஜி ஷிவாத்மா கூறுகையில், "பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்ற ஏழைகள், தாய் தந்தையற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட பெண்கள், முதியோர்கள், மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு இலவசமாக அனைத்து சேவைகளையும் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் இல...
ஆழியாறு அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா

ஆழியாறு அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா

லைப்ஸ்டைல்
இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை! ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த மனைவி நல வேட்பு நாள் என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் ஆழியாறு அறிவுத் திருக்கோவில் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி. உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர். சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்பத்துக்காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்லும் விதமாக ஓவ்­வொரு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தனது மனைவி அருளன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த நாளை 'மனைவி நல வேட்பு விழாவாக' கொண்டாடப்பட்டு வருகிறது பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில...
பத்தாவது ஆண்டை கொண்டாடும் கோ கிளாம் ஸ்பெஷல் எடிஷன் விற்பனை கண்காட்சி

பத்தாவது ஆண்டை கொண்டாடும் கோ கிளாம் ஸ்பெஷல் எடிஷன் விற்பனை கண்காட்சி

லைப்ஸ்டைல்
கோவையில் பிரபலமான கோ கிளாம் விற்பனை கண்காட்சி, அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் துவங்கியது. இது தொடர்ந்து பத்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை, அணிகலன்கள், நகைகள் போன்ற பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தும் நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஷாப்பிங் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி, கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு பண்டிகை மற்றும் சீசன்களில் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை, தனது பத்தாவது ஆண்டு கொண்டாட்டமாக ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி ஓட்டலில் துவங்கியது. ஆகஸ்ட் 30, 31, மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள...
பொள்ளாச்சியில் தீ இனிது இலக்கிய இயக்கம் நூல் அறிமுக விழா…

பொள்ளாச்சியில் தீ இனிது இலக்கிய இயக்கம் நூல் அறிமுக விழா…

லைப்ஸ்டைல்
தீ இனிது இலக்கிய இயக்கம் மற்றும் களிறு வெளியீடு சார்பில், பொள்ளாச்சி பர்வானா அரங்கில் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் எட்டு வயது எழுத்தாளர் யோகேஸ்வரன் எழுதிய "கஜராஜன் கலீம் தாத்தா", தாய்நதியின் "ஐந்திணைச் சொற்கள்" மற்றும் சாய் மீராவின் "நீலச்சிறகு" ஆகிய நூல்களின் அறிமுக உரைகள் வழங்கப்பட்டன. அறிமுக உரையை ஜி.சிவக்குமார், கோகலியமூர்த்தி, மற்றும் கருக்கல் சுரேஷ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் பாரதி மற்றும் பாரதிதாசன் கவிதைகள் பாடப்பட்டன. கவிஞர் நதிமலர் உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர். யோகேஸ்வரன், "நொய்யல்.. ஆறும் ஆறாத ரணமும்" எனும் தனிநபர் நாடகத்தை நிகழ்த்தினார். இளவேனில் இளங்கோவன் மற்றும் பள்ளி மாணவியர் சிலம்பாட்டத்தை ஆடிக்காட்டினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தீ இனிது அமைப்பின் கவிஞர் சோழநிலா வரவேற்புரையையும், பசுமைக்குரல் அமைப்ப...
இனி 2 மணி நேரத்தில் பேன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்..

இனி 2 மணி நேரத்தில் பேன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்..

லைப்ஸ்டைல்
நிரந்தர கணக்கு எண் (PAN) எனப்படும் பான் கார்டு, இந்திய வருமான வரி துறையால் வரி செலுத்துவோருக்காக வழங்கப்படும் 10 இலக்க எண் ஆகும். பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமப்படுகிறீர்களா? அப்பொழுது, அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைகளில், குறிப்பாக 'PayNearby' போன்றவற்றில், நீங்கள் இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் டிஜிட்டல் பான் கார்டைப் (ePAN) பெறலாம். 2024 மார்ச் 31 நிலவரப்படி, 31.05 கோடி பெண்களும் 42.10 கோடி ஆண்களும் பான் கார்டு வைத்துள்ளனர். இந்த வேறுபாடு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இன்னும் அதிகமாக உள்ளது. இதனைக் குறைப்பதற்காக 'PayNearby' மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் PAN சேவை மையமாக மாற்றப்பட்டுள்ளன. PAN கார்டைப் பெறுவதற்கான செயல்முறை: 1. புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க அல்லது புது பான் கார்டுக்கு புதுப்பிக்க வேண்டும் என்பதை கடை ஊழியர்களிடம் தெரிவிக்கவும். 2. உங்...
மரங்களில் வீடு கட்டி வசிக்கும் விவசாயிகள்

மரங்களில் வீடு கட்டி வசிக்கும் விவசாயிகள்

லைப்ஸ்டைல்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 22ஆம் நூற்றாண்டிலும் இயற்கையோடு ஒன்றிணைந்து மரங்களில் வீடுகளை கட்டி வசிக்கும் விவசாயிகள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், கொழுமத்திற்கு அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மேற்கொண்ட ஆய்வின்போது, ஆண்டிபட்டிக்கும் கொழுமத்திற்கும் இடையிலும், இரட்டையம்பாடிக்கும் இடையிலும் அமைந்துள்ள ராயர் குளம் பகுதியில், இம்மர வீடுகளை கண்டறிந்துள்ளனர். இந்த மரவீடுகள், பூர்வகுடி விவசாயிகள் தங்கள் வாழ்விடமாக மாற்றியுள்ளன. இயற்கையோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இவர்கள், காட்டு விலங்குகளை அச்சமின்றி எதிர்கொள்கின்றனர். யானைகள் மலையிலிருந்து தண்ணீர் குடிக்க வரும் போது, தென்னை மரங்களை மட்டும் சாய்ப்பதை கவனித்த இவர்கள், வேப்பமரத்தில் கட்டியிருக்கும் மரவீடுகளை பாதுகாப்பானதாகவும், மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்....