கோவையில் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டின் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சுழலும் உலக உருண்டை வெண்கல சிலைகளை கண்டு பொதுமக்கள் வியப்பு..
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில், ரம்மியமான சூழல் குளக்கரைகள் சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், ரேஸ்கோர்ஸ் நடைபாதை, என பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன..
இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகுபலி திரைப்படத்தில் பணியாற்றிய (Flag Ship) ஃப்லாக் ஷிப் மீடியா குழுவினரால் உருவாக்கப்பட்ட வேண்கல குதிரை சிலை,தமிழ் பாரம்பரிய காளை மாடுகள் சிலை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் இதே குழுவினர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிரம்மாண்ட வெண்கல கையில் உலக உருண்டை சுற்றுவதை வடிவமைத்துள்ளனர்.
இதே போல அருகில் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு காளை சிலையையும் உருவாக்கியுள்ளனர்..
இதற்கான துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்..
கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸில் தத்ரூபமாக துவங்கப்பட்டுள்ள சுழலும் உலக உருண்டை மற்றும் ஜல்லிக்கட்டு காளை முன்பாக பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்…
விழாவில் பெஸ்டென் பம்ப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ பிரியா கவுரிசங்கர்,புல் மெசின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் Flag ship மீடியா இயக்குனர்கள் சதீஷ் குமார் மகாபிரபு ஆகியோர் உடனிருந்தனர்…
Leave a Reply