“போலீஸ் அக்கா திட்டம்” டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு

IMG 20240905 WA0002 - "போலீஸ் அக்கா திட்டம்" டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் மாணவர் புகார் குழு, போதைப் பொருள் தடுப்பு குழு, பகடிவதை குழு மற்றும் சைபர் குற்றத் தடுப்புக் குழு இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு இளம் தலைமுறையினருக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாநகரக் காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி என்.ஜி.பி. கலையரங்கத்தில் நடைபெற்றது.

img 20240905 wa00018829891857966298028 - "போலீஸ் அக்கா திட்டம்" டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு

img 20240905 wa00004668919420355809692 - "போலீஸ் அக்கா திட்டம்" டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு

இந்த விழாவில் டாக்டர் என்.ஜி.பி.
கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி வரவேற்புரை வழங்கினார்.

கோவை மாநகர காவல் ஆணையர் கே. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் மாநகர வடக்கு துணை காவல் ஆணையர் முனைவர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.

இந்நிகழ்வின் தொடக்கமாக, டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையுரை வழங்கினார். இவர் தமது உரையில், இந்த உலகில் நம்முடைய நம்முடைய நாடு தற்போது வளர்ச்சி பெற்று வளர்ந்த நாடாக மாறியிருக்கிறது என்றார். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் மற்றும் கடமை என்றார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சமூகத்தில் பெண்களைப் பார்க்கின்ற பார்வை சரியானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தினைத் தமது உரையில் பதிவு செய்தார். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நமது தேசத்திலிருந்து ஒழித்துவிடுதல் வேண்டும் எனவும் அப்பொழுதுதான் இளம் தலைமுறையினரின் வாழ்வு சீரியதாக இருக்கும் என்றார்.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் தீ இனிது இலக்கிய இயக்கம் நூல் அறிமுக விழா…

கோவை மாநகர துணை காவல் ஆணையர் திருமதி.வி.சுஹாசினி சிறப்புரை வழங்கினார். அவர் தமது உரையில், சமூகத்தில் தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி பழக வேண்டிய சமத்துவமான சூழல் நிகழ்கிறது. அச்சூழலில் பெண்கள் தங்களுக்கென ஒரு வரைகோட்டை வரைந்து அதற்குள் பழக வேண்டும் என்றார். அந்த வரைகோட்டைப் பெண்கள் மீறும்பொழுது பிரச்சினைகள் நிகழுகின்றன என்றார். பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்றார். ’போலீஸ் அக்கா’ என்கின்ற பெண்களுக்கு அவசர நேரங்களில் உதவிடும் திட்டம் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

ஒவ்வொரு கல்லூரிக்கும் தனிப்பட்ட பெண் காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்னர். அவர்களிடம் கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படுகின்ற தனிப்பட்ட எவரிடமும் சொல்ல இயலாத சமூகம் சார்ந்த பிரச்சினைகளைக் கூறித் தீர்வு கண்டு கொள்ளலாம் என்றார். போராட்ட குணம், விடா முயற்சி, கடின உழைப்பு இவை இருந்தால் வாழ்வில் நிச்சயாக வெற்றி பெறலாம் என்றார். எஸ்ஓஎஸ் என்கின்ற அப்ளிகேஷனை செல்பேசியில் பதிவிறக்கம் செய்து காவல்துறையை உடனடியாகத் தொடர்பு கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்றார்.

துணை காவல் ஆணையர் முனைவர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் சிறப்புரை வழங்கினார். அவர் தமது உரையில், பெண்கள் தைரியத்துடனும் வீரத்துடனும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

கோவை மாநகர காவல் ஆணையர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், உரையாற்றினார். அவர் தமது உரையில், கல்லூரி மாணவிகள் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம், தைரியத்தை வளர்த்துக் கொள்ளும் திறன் குறித்து உரையாற்றினார். சமூக வலைத்தளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.

இதையும் படிக்க  மகாராணி காயத்ரி தேவி !

மேலும் காலம்காலமாகப் பெண்கள் சார்ந்து சில கற்பிதங்கள் சமூகத்தில் கூறப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றை முழுவதுமாக நம்பாமல் பெண்கள் புதிய சிந்தனையுடன் இச்சமூகத்தை நோக்குகின்ற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடல் நிகழ்வு அடுத்து நடைபெற்றது. மாணவிகள் தங்களுடைய வாழ்வில் தாங்கள் சந்தித்த பாலியல் சார் இன்னல்கள் அவற்றின் சமூகம் சார்ந்த பார்வை பற்றி உரையாடித் தங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.

மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் குறும்படம் திரையிடப்பட்டது. ’போலீஸ் அக்கா’ என்னும் அமைப்பின் செயல்பாடு குறித்து மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இந்நிகழ்வில் கூறப்பட்டது. ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தைரியமாக போலீஸ் அக்கா என்னும் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கின்ற காவல் அதிகாரியிடம் பெண்கள் கூறலாம் என்றார். கோவை மாநகரம் முழுவதும் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாகப் பெண் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்ற காவல் துறையின் மேலான நடவடிக்கை பற்றி எடுத்துரைத்தார்.

இந்திகழ்வில் டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி, என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் கல்விசார் இயக்குநர் திருமதி மதுரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts