இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை! ஓவ்வொரு ஆணும் தனது வாழ்க்கைத்துணையை நன்றியோடு வாழ்த்த மனைவி நல வேட்பு நாள் என்ற கொண்டாட்டத்தை அறிமுகம் செய்தவர் ஆழியாறு அறிவுத் திருக்கோவில் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி.
உலகிலே தந்தையர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், காதலர்கள் தினம், நண்பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊனமுற்றோர் தினம், என தனித்தனியே கொண்டாடி மகிழ்கின்றனர். சுமங்கலி பூஜையை கணவன் நலனுக்காக மனைவியரும் வேண்டுகிறார்கள்.
குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கும் மனைவிக்கு நன்றி சொல்லும் விதமாக ஓவ்வொரு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தனது மனைவி அருளன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த நாளை ‘மனைவி நல வேட்பு விழாவாக’ கொண்டாடப்பட்டு வருகிறது
பெண்மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்போதும் கெட்டதில்லை. பெண்ணினத்தை மதிக்காத தனி மனிதனோ,சமுதாயமோ உயர்வடைந்ததாக சரித்திரம் இல்லை எந்தச் சமுதாயம் பெண்மையை போற்றி அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்கிறதோ அந்த சமுதாயம்தான் அறிவிலும்,ஆன்மீகத்திலும் சிறப்புற்று விளங்கும் என்பதை உணர்த்தும் வகையில் இன்று நடைபெற்ற விழாவில் கணவன் மனைவிக்கு மலர்கள் வழங்கி அன்பை வெளிப்படுத்தினர் அதே போல் மனைவி கணவருக்கு கனி வழங்கினர்.
பெற்றோரை, பிறந்த வீட்டை ,உறவுகளை பிரிந்து கணவருக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழும் மனைவியை சிறப்பிக்கும் இவ் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு அறிவுத் திருக்கோவில் அறங்காவலர் R. பச்சையப்பன் வரவேற்புரை வழங்கினார் முதுநிலை பேராசிரியர் Dr.K. பெருமாள் வேட்பு நல உரை நிகழ்த்தினார். பெண்ணின் பெருமை குறித்து மரபின் மைந்தன் முத்தைய்யா சிறப்புரை ஆற்றினார் மாண்புமிக்க மனைவி எனும் தலைப்பில் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா.MP உரையாற்றினார் இணை நிர்வாக அறங்காவலர் M.சின்னச்சாமி நன்றியுரையாற்றினார்.
Leave a Reply