நேபாளத்தின் முனால் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக, இந்திய வெளியுறவு அமைச்சகமும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனமும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நேபாளத்தில் NAST நிறுவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த முனால் செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் தாவர அடர்த்தி தொடர்பான தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் NSIL-ன் போலார் சேட்டிலைட் ஏவுகணை வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
7வது கூட்டு கமிஷன் கூட்டத்தின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
Leave a Reply