ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்புலத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் திங்கள்கிழமை குறுகிய சரிவுடன் ஆரம்பித்துள்ளன.
ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமத்தின் முறைகேடு குறித்த வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பான புகார்களை, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் பங்குகளுடன் இணைத்து வெளிப்படுத்தியுள்ளது.
இதனால், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிந்து 79,330 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகளும் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. அதானி எனர்ஜி 17%, அதானி டோட்டல் கேஸ் 13.39%, எண்டிடிவி 11%, அதானி பவர் 10.94%, அதானி எனர்ஜி 6.96%, அதானி வில்மர் 6.49%, அதானி என்டர்பிரைசஸ் 5.43%, அதானி போர்ட் 4.95%, அம்புஜா சிமென்ட்ஸ் 2.53%, மற்றும் ஏசிசி 2.42% சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில், ஹிண்டன்பர்க் குழுமம் முதன்முதலில் அதானி குழுமத்தின் முறைகேட்டைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டபோது, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply