குற்றால அருவிகளில் குளிக்க தடை

Kutralam Water Falls - குற்றால அருவிகளில் குளிக்க தடை

கனமழை எச்சரிக்கை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மே17 குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பொருக்கில் 17 வயது சிறுவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழையகுற்றாலம் அருவியில் கொட்டிய குறைந்த அளவு தண்ணீரில்  சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பதறியடித்து வெளியேறினா். அப்போது தென்காசி அருகே மேலகரத்திலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்த அஸ்வின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாா்.தகவலறிந்து வந்த  தீயணைப்பு,காவல் துறையினா் மற்றும்  மீட்புப் பணி துறையினர்  அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனா்.நீண்ட நேரம் தேடலுக்குப் பின் பழையகுற்றாலம் அருவியில்  சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *