
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விஜயவாடா மண்டலம் 99.04 சதவீதம் பெற்று இரண்டாமிடத்தையும், பிரயாக்ராஜ் 78.25 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.