கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளின் போட்டிகள்: கார்மல் கார்டனில் வைர விழா அனுசரணையில் தொடக்கம்….

IMG 20240831 WA0043 - கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளின் போட்டிகள்: கார்மல் கார்டனில் வைர விழா அனுசரணையில் தொடக்கம்....

கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் இன்று காலை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, பள்ளியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது.

இதில், கோவையின் 25-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவை, பள்ளியின் முன்னாள் முதல்வர் அருட்திரு ஏ.எல். சுந்தர் ராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் தங்களின் படைப்புத் திறனையும், கலைநயத்தையும் வெளிப்படுத்தும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களை செதுக்குதல் போன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயூஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில், செல்வம் ஏஜென்சியின் உரிமையாளர் நந்த குமார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

இதையும் படிக்க  சவுக்கு சங்கர்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *