பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உலக நோயாளி பாதுகாப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நோயாளி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
1. நோயாளியின் பராமரிப்பில் ஏற்படும் தவறுகளை குறைக்கும் வழிமுறைகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவேன்.
2. நோயாளி தொடர்புடைய செயல்பாடுகளில் என் அறிவையும் திறமையையும் மேம்படுத்துவேன்.
3. நோயாளி மற்றும் அவரின் குடும்பத்தினரை சிகிச்சையில் பங்கேற்கச் செய்வேன்.
4. பராமரிப்பில் வெளிப்படை தன்மையை வளர்த்துக்கொண்டு குழுவாகச் செயல்படுவேன்.
5. நோயாளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவேன்.
6. பராமரிப்பில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி, அவர்களின் நலனை பாதுகாக்க முயற்சி செய்வேன்.
7. நோயாளி பாதுகாப்பிற்காக சக வல்லுனர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஆதரவாக இருப்பேன்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply