கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச சந்திப்பு நிகழ்ச்சி !

IMG 20240901 WA0000 - கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச சந்திப்பு நிகழ்ச்சி !

கோவை நியூ சித்தாபுதூரில் உள்ள பேபியமா கிளினிக்கில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச நிகழ்ச்சியில், தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மகப்பேறு மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தளிர் நிறுவனத்தின் பிறப்பு கல்வியாளர் மற்றும் பாலூட்டல் ஆலோசகர் ஹரிதா, அச்சின்தியா கர்ப்ப கவனிப்பு நிறுவனத்தின் ராஜேஸ்வரி செந்தில், குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் காயத்ரி, பேபியமா நிறுவனர் மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அஸ்வின் சங்கமேஷ், மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் அம்பிகா மற்றும் ரஞ்சனி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

டாக்டர் அஸ்வின் சங்கமேஷ், தாய்மார்கள் பிரசவம், குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகளின் மருத்துவ தேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

இதையும் படிக்க  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts