கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் இன்று காலை கணுவாய் தடுப்பணை மேற்கு பகுதியில் தொடங்கியது. கோவை மேற்கு மலைத்தொடர்கள் தடாகம் பகுதியில் உள்ள, சுமார் 14 ஏக்கர் பரப்பளவுள்ள கணுவாய் தடுப்பணையை சீரமைத்து பராமரிக்கும் முயற்சியின் முதல் கட்டமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மரக்கன்றுகள் வைத்து பணிகளை துவங்கினார்கள்.
கணுவாய் தடுப்பணை, சங்கனூர் நதியின் இடையே நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு, 27 வருடங்களுக்கு பிறகு, தடுப்பணை நிறைந்து வழிந்து சின்னவேடம்பட்டி ஏரி மற்றும் ராஜவாய்க்காலுக்கு பெருமளவு தண்ணீர் கிடைத்தது. இந்த தடுப்பணை சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பை கழிவுகளால் பராமரிப்பின்றி இருந்த நிலையில், கௌசிகா நீர்கரங்கள் அமைப்பின் முயற்சியால் சுத்தம் மற்றும் பசுமை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பணை மீட்டுருவாக்கம் செய்யப்படவுள்ளது.
மாநகராட்சி ஆணையர் நிகழ்வில் பேசும்போது, நீர் நிலைகளை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது மக்களின் தாகத்தின் பொருட்டு மிக முக்கியம் என்பதை தெரிவித்துள்ளார். கௌசிகா நீர்க்கரங்கள் போன்ற அமைப்புகள் நீர்நிலை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் தனது உரையில், காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு அதிகரித்து, தண்ணீர் உடனடியாக ரன் ஆஃப் ஆக ஓடிவிடுகிறது. இந்த சூழ்நிலையில், நீர் நிலைகளை காப்பது அவற்றை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும், அதனால் கிடைக்கும் நீரை சேமிக்க முடியும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில், பன்னிமடை ஊராட்சி நிர்வாகம் சார்பாக, குப்பை மேலாண்மை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தடுப்பணையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிகழ்வில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி,மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கியது
Follow Us
Recent Posts
-
மது, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளிலிருந்து மக்களை காப்போம்: திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் விழிப்புணர்வு மனித சங்கிலி
-
திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா…
-
மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு
-
திருச்சியில் சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் !
-
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ….
Leave a Reply