கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி,மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கியது

கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் இன்று காலை கணுவாய் தடுப்பணை மேற்கு பகுதியில் தொடங்கியது. கோவை மேற்கு மலைத்தொடர்கள் தடாகம் பகுதியில் உள்ள, சுமார் 14 ஏக்கர் பரப்பளவுள்ள கணுவாய் தடுப்பணையை சீரமைத்து பராமரிக்கும் முயற்சியின் முதல் கட்டமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மரக்கன்றுகள் வைத்து பணிகளை துவங்கினார்கள்.

கணுவாய் தடுப்பணை, சங்கனூர் நதியின் இடையே நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு, 27 வருடங்களுக்கு பிறகு, தடுப்பணை நிறைந்து வழிந்து சின்னவேடம்பட்டி ஏரி மற்றும் ராஜவாய்க்காலுக்கு பெருமளவு தண்ணீர் கிடைத்தது. இந்த தடுப்பணை சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பை கழிவுகளால் பராமரிப்பின்றி இருந்த நிலையில், கௌசிகா நீர்கரங்கள் அமைப்பின் முயற்சியால் சுத்தம் மற்றும் பசுமை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பணை மீட்டுருவாக்கம் செய்யப்படவுள்ளது.

மாநகராட்சி ஆணையர் நிகழ்வில் பேசும்போது, நீர் நிலைகளை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது மக்களின் தாகத்தின் பொருட்டு மிக முக்கியம் என்பதை தெரிவித்துள்ளார். கௌசிகா நீர்க்கரங்கள் போன்ற அமைப்புகள் நீர்நிலை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் தனது உரையில், காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு அதிகரித்து, தண்ணீர் உடனடியாக ரன் ஆஃப் ஆக ஓடிவிடுகிறது. இந்த சூழ்நிலையில், நீர் நிலைகளை காப்பது அவற்றை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும், அதனால் கிடைக்கும் நீரை சேமிக்க முடியும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில், பன்னிமடை ஊராட்சி நிர்வாகம் சார்பாக, குப்பை மேலாண்மை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தடுப்பணையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிகழ்வில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளின் போட்டிகள்: கார்மல் கார்டனில் வைர விழா அனுசரணையில் தொடக்கம்....

Sat Aug 31 , 2024
கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் இன்று காலை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, பள்ளியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது. இதில், கோவையின் 25-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவை, பள்ளியின் முன்னாள் முதல்வர் அருட்திரு ஏ.எல். சுந்தர் ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களின் […]
IMG 20240831 WA0043 - கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளின் போட்டிகள்: கார்மல் கார்டனில் வைர விழா அனுசரணையில் தொடக்கம்....

You May Like