ஆம்ஸ்ட்ராங் கொலை – டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை…

images 64 - ஆம்ஸ்ட்ராங் கொலை - டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை...

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன் போன்றோர் மட்டுமல்லாமல், அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலைக்குப் பிணைப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். அவர் தற்போது தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், மொட்டை கிருஷ்ணனுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல உதவியதாகவும், அவர் வெளியேறுவதற்கு முன்பு நெல்சன் மனைவி மோனிஷா தொடர்ந்து அவருடன் போனில் தொடர்பில் இருந்ததாக போலீசார் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க  ஹோட்டல் உரிமையாளரை சிவில் அடிக்க பாய்ந்த சப்-இன்ஸ்பெக்டர்…

இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய போலீசார் தீவிர விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *