பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர் கைகளில் பதாகைகள் ஏந்தி மனு அளித்தார்.
மனுவில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தில் வசிக்கும் தனக்கு 1996 ஆம் ஆண்டு அரசு இலவசமாக இரண்டு சென்ட் நிலம் வழங்கியது கணவரை இழந்த நான் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேறலாம் என்று அதற்கான பணிகளில் செயல்பட்டேன் மேலும் அதற்குண்டான வீட்டு வரியையும் தவறாமல் கட்டி வந்துள்ளேன் இந்நிலையில் அந்த இடத்தில் வீடு கட்ட அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர் அப்போது விசாரித்த போது அந்த இடத்தை என் உடன் பிறந்த அண்ணன் முத்துசாமி அவரது மகன் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மகள்கள் சேர்ந்து போலியான ஆவணங்கள் தயாரித்து கோமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்தது எனவே போலியாக பத்திர பதிவு செய்து மோசடி செய்த எனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்
மேலும் போலி பத்திர பதிவு குறித்து பார்வதி கூறும் போது ஆதி திராவிடர் தனி வட்டாட்சியரால் 1996 ஆம் ஆண்டு இரண்டு சென்ட் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது கோமங்கலம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் எனது உடன் பிறந்த அண்ணன் பெயருக்கு பத்திரபதிவு நடைபெற்றுள்ளது
நான் எவ்வித ஒப்புதலும் வழங்காமல் என்னுடைய ஆதார் மற்றும் போலி கைரேகை பயன்படுத்தி பத்திர பதிவு செய்துள்ளனர் இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை இந் நிலையில் எனது அண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததால் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் காவல்துறையும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் எனவே போலி பத்திர பதிவு செய்து வீட்டு மனையை அபகரித்த எனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்ணீருடன் தெரிவித்தார்.