பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஆனைமலை கோட்டூர் உட்பட சுற்றுப்புறத்தை சேர்ந்த உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்
ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் செப்டம்பர் 6ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு பொள்ளாச்சி சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா தெரிவித்துள்ளார்.