
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில், சதீஷ்குமாரின் 4 வயது மகள் கிருஷிகாஸ்ரீ, நாய் கடித்து பலத்த காயமடைந்தார். சதீஷ்குமார் தனது இரு மகள்களான கிருஷிகாஸ்ரீ மற்றும் ரிதன்யாஸ்ரீயை டியூஷன் சென்டரில் விடச் செல்வதற்காக சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், கிருஷிகாஸ்ரீ மீது தாக்கி, தலை மற்றும் முகத்தில் கடித்தது. சிறுமி பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கோமங்கல காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

