தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நகரச் செயலாளர் விஜயகுமார் தலைமையில், மேகுபாறை பள்ளிவாசல் மற்றும் பெரியார் சிலை அருகில் 400 பேருக்கு உணவு வழங்கி “மீளாது விழா” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் நவ்ஷாத் அலிகான், மாவட்டச் செயலாளர் அபூபக்கர் சித்திக், நகர இளைஞரணி செயலாளர் டி. குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் இமான் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் சமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.