Friday, January 24

ரயில்வே போராட்டத்தில் உயிர்நீத்த 17 ஊழியர்களுக்கு செவ்வணக்கம்: பழைய ஓய்வூதியம் மீட்பு கோரிக்கையுடன் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!


1968 ஆம் ஆண்டு ரயில்வே ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியம், அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்து வழங்குதல், விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படி உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி உயிர்நீத்த 17 ரயில்வே ஊழியர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமையிலும், துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ராஜாஸ்ரீதர், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷனை அறிவித்திருப்பதாக குறிப்பிட்டார். வருங்காலங்களில் பென்ஷன் அதிகரிக்க எஸ்ஆர்எம்யூ தொடர்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க  பள்ளிக்கல்வித்துறை செயலற்ற நிலையில் உள்ளது- எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *