பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று விமர்சித்ததை எதிர்த்து, பாஜக தலைவர் ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விமர்சனம் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகையின் உத்தரவின்படி, ஹெச். ராஜாவின் செயலை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சியில் திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஹெச். ராஜாவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பி, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் நகர மற்றும் வட்டார தலைவர்கள் செந்தில்குமார், அமீர் இஸ்மாயில், தமிழ்செல்வன், கருணை மகாலிங்கம், ஜவஹர்பாண்டியன், பூபதி, பழனிசாமி, கண்ணன், சிவக்குமார் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply