பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து அரசுக்கு வரி செலுத்தாமல், ஆவணங்களின்றி, அரசு நிர்ணயித்த அளவுக்குஇள அதிகமாக கனிம வளங்களை எடுத்துச் செல்வதாக புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து, சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷ் மற்றும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து ஆணையாளர் நாகராஜன் தலைமையிலான குழு கோபாலபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் சோதனையை நடத்தியது.
அதில், ஆவணங்கள் இன்றியும் அதிக அளவு பாரம் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அரசின் விதிமுறைகளை மீறி கனிம வளங்களை எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இணை ஆணையர் எச்சரித்துள்ளார்.
Leave a Reply