Tuesday, January 21

சவுக்கு சங்கர் வழக்கில் குண்டர் சட்டம் மனித உரிமைகளை மீறுகிறது

குண்டர் தடுப்புச் சட்டம் மனித உரிமைகளை அத்து மீறுவதாகவும், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கோபாலகிருஷ்ணன் கூறினார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “சவுக்கு சங்கருக்கு எந்த விதமான நிபந்தனையும் நீதிமன்றம் வழங்கவில்லை; அவர் சுதந்திரமாக யூடியூப் மற்றும் பொதுவெளியில் பேசலாம்” என்றார்.

சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றத்தில் குண்டாஸ் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சவுக்கு சங்கர் மீது 27 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு அரசு அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 2 குண்டாஸ் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது.

“தமிழகத்தில் குண்டாஸ் சட்டம் மனித உரிமை மீறலாக உள்ளது. நீதிமன்றமே ‘குண்டாஸ் ஏன் போடப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது” என்றார் கோபாலகிருஷ்ணன்.

மேலும், “இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அதிக அளவில் குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய நபர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சவுக்கு சங்கர் மீதும் அவரது பேட்டி அளித்த யூடியூப் சேனல் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது” என்றார்.

சவுக்கு சங்கர் வழக்கில் காவல்துறையினர் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அரசாங்கம் செய்த தவறுகளை புரிந்து கொள்ள 44 நாட்கள் ஆகிவிட்டதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். “நக்சலைட், ஜம்மு காஷ்மீரில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் துப்பாக்கிசூடு சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது அதிர்ச்சி அளிக்கின்றது” என்றார்.

இதையும் படிக்க  ஒரே குடும்பத்தை சோர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *