செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு திமுக அமைச்சர்கள், எம்.பி. ஜோதிமணி சந்திப்பு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 26ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

ஜாமீனின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும், ரூ. 25 லட்சம் உத்தரவாதம் அளிக்க வேண்டும், மேலும் வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இன்று காலை, திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்து வரவேற்பு தெரிவித்தனர். கரூர் எம்.பி. ஜோதிமணியும் செந்தில் பாலாஜியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஜோதிமணி, “செந்தில் பாலாஜி எந்த சமரசமும் இன்றி, சட்டப்போராட்டம் மூலம் வெளிவந்துள்ளார். அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்,” என்றார்.

இதையும் படிக்க  மாநில செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீபாவளி, சத் பூஜை பண்டிகைக்கு 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு...

Fri Sep 27 , 2024
தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதியும், சத் பூஜை நவம்பர் முதல் வாரத்திலும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பெரும்பாலான மக்கள் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். இதை மனதில் கொண்டு ரயில்வே துறையின் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்த […]
image editor output image 1490240680 1727422580584 - தீபாவளி, சத் பூஜை பண்டிகைக்கு 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு...

You May Like