கோவையில் பிரபலமான கோ கிளாம் விற்பனை கண்காட்சி, அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் துவங்கியது. இது தொடர்ந்து பத்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை, அணிகலன்கள், நகைகள் போன்ற பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தும் நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஷாப்பிங் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி, கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு பண்டிகை மற்றும் சீசன்களில் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை, தனது பத்தாவது ஆண்டு கொண்டாட்டமாக ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி ஓட்டலில் துவங்கியது.
ஆகஸ்ட் 30, 31, மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓணம் பண்டிகை வருகையை முன்னிட்டு பெண்களுக்கான பல்வேறு விதமான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி துவக்க விழாவில், ஹீனா மற்றும் ராகுல் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், சிறப்பு விருந்தினர்களாக மீனா, விஜயலட்சுமி, கவிதா மகேஷ்வரி, தீபிகா ராவ், பல்குணா பதானி, மாலினி, துருதி செந்தில், அபிராமி சிபி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல், “பத்தாவது ஆண்டு கொண்டாட்டத்தை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடத்தி வருகிறோம். வாடிக்கையாளர்கள் தேவைகளுக்கேற்ப அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர். மேலும், கோடை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற காட்டன் துணிகள், கொல்கத்தா, லூதியானா, குஜராத், டில்லி, ஜெய்ப்பூர், புனே உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன என்றும் கூறினர்.
கண்காட்சியில் ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள், பிரத்யேக வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட காலணிகள், இயற்கை அழகுக்கலைப் பொருட்கள், சிகை மற்றும் முக அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 30 தேதியில் தொடங்கி, மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல வாடிக்கையாளர்கள் வருகை தந்து ஆர்வமுடன் பொருட்களை வாங்கி செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.