நார்வே செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா!மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்லசனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் ‘கிளாசிக்கல் செஸ்’ வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும், பிரக்ஞானந்தா! ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது!. என்று குறிப்பிட்டுள்ளார்.
You May Like
-
9 months ago
17 வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024
-
6 months ago
தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
-
7 months ago
கேமராமேன் காயம்-ரிஷப் பந்த் மன்னிப்பு