கேஜரிவாலின் ஜாமீன் மனு நிகாரிப்பு

Arvind Kejriwal 1681616621721 1681618654149 1681618654149 - கேஜரிவாலின் ஜாமீன் மனு நிகாரிப்பு


ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கேஜரிவாலின் கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்காது என்று தெரிவித்துள்ளது.டெல்லி மதுபானக் கொள்கை ’ஊழலில்’ தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான முதல்வா் கேஜரிவாலுக்கு மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்வதற்காக கடந்த மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் 21 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. தோ்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த ஒரு நாள் கழித்து, ஜூன் 2 ஆம் தேதி கேஜரிவால் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.இந்த நிலையில், திடீரென குறைந்த உடல் எடை மற்றும் அதிக கீட்டோன் அளவுகள்‘ ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பிஇடி-சிடி ஸ்கேன் உள்பட பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனது இடைக்கால ஜாமீனை மேலும் ஏழு நாள்களுக்கு நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வா் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.இந்த நிலையில், டெல்லி முதல்வர் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய மனுவை “உச்ச நீதிமன்றம் விசாரிக்காது” என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  4 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *