
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு ‘(NEET-UG) நாடு முழுவதும் 557 நகரங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பிகாரில் இத்தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடா்பாக மாநிலக் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.இதையடுத்து பலருக்கும் மறுதோர்வு நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டிறருந்த நிலையில் திடீர்ரென இன்று நடைபெற இருந்த நீட் தேர்வை ரத்து செய்யப்பட்டது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 292 நகரங்களில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.