கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் 24 வயதுக்கு குறைவான மக்கள்தொகை 58.2 கோடியிலிருந்து 58.1 கோடியாகக் குறைந்துள்ள நிலையில், தற்கொலை எண்ணிக்கை 6,654இல் இருந்து 13,044ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வில், மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 3 இல் 1 பங்கு இந்த மாநிலங்களில் காணப்படுகிறது.
தற்கொலை செய்யும் மாணவர்களின் 29 சதவிகிதம் தென் இந்தியா மாநிலங்களைச் சார்ந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 50 சதவிகிதமும், மாணவிகளின் எண்ணிக்கை 61 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply