பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படும். இதில், சில லாரிகள் சட்ட விரோதமாக அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக, கற்கள் ஏற்றி செல்லுவது வழக்கமாக அமைந்துள்ளது.
கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனை சாவடிகள் மற்றும் மாற்றுப் பாதைகளால் கேரளாவுக்கு அதிக அளவு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதற்கிணங்க, இணை போக்குவரத்து ஆணையர் சிவக்குமரனின் உத்தரவின் அடிப்படையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று இரவு சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக 20 டன் கற்கள் ஏற்றிய 10 லாரிகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளுக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட லாரிகளுக்கு, மேலும் சோதனைகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply