
கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கேஜரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.
இந்த நிலையில், கேஜரிவாலின் உடல்நிலை மற்றும் சிகிச்சையைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் நடவடிக்கைகளைக் காணொலி மூலம் தனது மனைவியை அனுமதிக்குமாறு கேஜரிவால் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நீதிபதி சனிக்கிழமை ஒத்திவைத்தார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.கேஜரிவாலின் நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.