கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில்,இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கேஜரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தற்பொழுது ஏற்றுக்கொண்டது.1 லட்சம் ரூபாய் பிணையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மத்திய நிறுவனம் அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சவால் செய்வதற்காக ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட குறைந்தபட்சம் 48 மணிநேரத்தை அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் மறுத்தது.