புனேவில் கல்லூரி விடுதியில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள கல்லூரியின் ஆண்கள் விடுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. கல்லூரி ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தீயணைப்பு துறை மற்றும் மின்சார துறையினரை தொடர்பு கொண்டனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்ததாக  தெரிவித்தார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்து மேலும் சேதம் ஏற்படாமல் தடுத்தனர். தீவிபத்து ஏற்பட்ட கல்லூரி தனியார் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கான புகைப்படக் கண்காட்சி பொள்ளாச்சியில் தொடக்கம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டு, குறைகளை களைய வேண்டும் - திருச்சியில் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை!

Sun Jul 7 , 2024
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கடந்த 1 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள […]
IMG 20240707 WA0033 1 | புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டு, குறைகளை களைய வேண்டும் - திருச்சியில் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை!