புதுச்சேரி கடலூர் சாலையில் இனி பார்க்கும் கட்டணம் வசூல்

புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 16ம் தேதி முதல் ஏ.எப்.டி. திடலை தற்காலிக பஸ்டாண்டாக மாற்றி, அனைத்து பஸ்களும் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஏ.எப்.டி. திடலுக்கு அருகில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த இடத்திற்கு புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வார நாட்கள் மற்றும் வேலை நாட்களில் வந்து செல்கின்றனர். இப்பகுதி முழுவதும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக இருந்தது. இந்நிலையில், பேருந்து நிலையம் ஏ.எப்.டி. திடலுக்கு மாற்றப்பட்டதால், கடலூர சாலையில் கட்டண பார்க்கிங் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தோணியார் கோவிலில் இருந்து ரயில்வே கேட் வரை ஒரு பக்கமாக இருசக்கர வாகனங்கள் நிறுத்த புதிய பார்க்கிங் கட்டணத்தை புதுச்சேரி நகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையில், புதுச்சேரி நகராட்சி கடலூர சாலையில் கட்டண பார்க்கிங் டெண்டரை வெளியிட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பொழுது 10 பணியாளர்கள் கடலூர் சாலையில் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புனேவில் கல்லூரி விடுதியில் தீ விபத்து!

Sun Jul 7 , 2024
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள கல்லூரியின் ஆண்கள் விடுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. கல்லூரி ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தீயணைப்பு துறை மற்றும் மின்சார துறையினரை தொடர்பு கொண்டனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்ததாக  தெரிவித்தார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் […]
QT fire kota | புனேவில் கல்லூரி விடுதியில் தீ விபத்து!