கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். இதில் ஆண்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கிரீன் டீயில் கலோரிகள் மற்றும் சர்க்கரை இல்லாததால் மனித உடலுக்கு அதிக ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது. இந்த டீயில் கேட்டசின்கள் எனப்படும் தாவர மூலக்கூறுகள் இருப்பதால் அதிகபட்ச நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியுள்ளது.