இக்னோ பல்கலைக் கழகத்திற்கான மாணவர் சேர்க்கை நீடிப்பு…

இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை 2024 மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை முதுநிலை மண்டல இயக்குநர் முனைவர் கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இவ்வாறு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் (NAAC) ஏ++ தர அங்கீகாரம் பெற்ற இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) ஜூலை 2024 பருவத்திற்கான மாணவர் சேர்க்கையின் கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2024 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு https://ignouadmission.samarth.edu.in (ODL பருவங்களுக்காக) மற்றும் https://iop.ignouonline.ac.in (ஆன்லைன் படிப்புகளுக்காக) என்ற இணையதளங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

பிஏ (பொது), பி.காம் (பொது), மற்றும் பி.எஸ்.சி (பொது) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களை www.ignou.ac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம், அல்லது rcchennai@ignou.ac.in, rcchennaiadmissions@ignou.ac.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்ணில் 044-26618040 மூலம் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.

இதையும் படிக்க  டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்க Canva மற்றும் CBSE கூட்டாண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை...

Sat Aug 17 , 2024
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு தற்போது பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில், மழை காரணமாக மலைப்பாதையில் நீர் ஓடைகள் உருவாகியுள்ளதால், அங்கு செல்லும் பாதை சிரமமானதாக மாறியிருக்கிறது. இதனால், பக்தர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கோவிலுக்கு செல்வதை தடைசெய்யும் முடிவை வனத்துறையினர் எடுத்துள்ளனர். அதனால், பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் என அவர்களிடம் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Post Views: […]
images 49 - சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை...

You May Like