இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை 2024 மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை முதுநிலை மண்டல இயக்குநர் முனைவர் கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இவ்வாறு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் (NAAC) ஏ++ தர அங்கீகாரம் பெற்ற இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) ஜூலை 2024 பருவத்திற்கான மாணவர் சேர்க்கையின் கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2024 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு https://ignouadmission.samarth.edu.in (ODL பருவங்களுக்காக) மற்றும் https://iop.ignouonline.ac.in (ஆன்லைன் படிப்புகளுக்காக) என்ற இணையதளங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
பிஏ (பொது), பி.காம் (பொது), மற்றும் பி.எஸ்.சி (பொது) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களை www.ignou.ac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம், அல்லது rcchennai@ignou.ac.in, rcchennaiadmissions@ignou.ac.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்ணில் 044-26618040 மூலம் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.
Leave a Reply