
தமிழகத்தில் +1 தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கோவை 96.02 சதவிகிதத்துடன் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.89.41 சதவிதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் கடைசி இடத்தில் உள்ளது.தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/, https://www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.