திருப்பூர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையிலான வழிகாட்டுதலுடன் திமுக ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான களப்பணி பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதனிடம், நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், அதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது, குறிப்பாக பெண்கள் மத்தியில். அதனால், எங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது, எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று பதிலளித்தார்.
Leave a Reply