கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால் கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மேலும் கவிதா தங்களை ஜாதி பெயரை குறிப்பிட்டு இழிவுப்படுத்துவதாகவும், தங்கள் மீது பொய் புகாரை அளித்திருப்பதாகவும் எனவே அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டனர்.
இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவிதா என்பவர் அளித்துள்ள புகார் குறித்தும் அங்கு நடந்தது என்ன என்பது குறித்தும் விளக்கமளிக்க வந்திருப்பதாக கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருப்பதாக தெரிவித்ததாக கூறினார். மேலும் அங்கு அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதாக தகவல்கள் வருவதாக தெரிவித்தார்.
இந்த மனுவை அளிக்க அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்ததால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டது.
Leave a Reply