Thursday, February 13

அணைக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு உபரி நீரின் அளவு குறைந்தது.

அணைக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்...அதோடு அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால் உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அணைக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்...
இந்நிலையில் உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள் திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும் போது திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி கடந்த ஒரு வருடமாக அப்பகுதி விவசாயிகள் நாங்கள் போராடி வருகிறோம் விவசாயிகள் தங்கள் கால்நடைகள் மற்றும் குடிநீருக்கு பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.

இதையும் படிக்க  மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு

ஆனால் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர் தற்போது பெய்த பருவமழை காரணமாக பி ஏ பி திட்டத்திற்குட்பட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளது எனவே உப்பாரு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் அதிகாரிகள் சுமூகமான முடிவை எடுக்காவிடில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *